கதை முன்னோட்டம்

2018

புரிய வைக்கும் புதுமை எழுத்துக்கள்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , மு.களத்தூர்

Tamil Nadu

வழிகாட்டி

குருமூர்த்தி இராமலிங்கம்

மாணவர்கள்

மா.பூமிகா ,

ஈ.சுபீஷா,

சி.பிரவீணா,

ஜெ.கௌதம்,

வை.தரணிதரன்,

Step 1 உணரவும்

1. பள்ளியின் முன்புறமும் அருகிலும் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கருவேல மரங்கள் வளர்ந்திருத்தல். 2. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பள்ளிக்கு தண்ணீர் வருதல். 3. சில மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எழுத்துக்களை அடையாளப்படுத்துவதில் சிரமம். 4. ஆங்கில எழுத்துக்களில் b - d , n - h , f - t போன்ற எழுத்துக்களை மாணவர்கள் புரிந்துகொள்வதில் சிரமம். 5. அனைத்து மாணவர்களும் snacks கொண்டுவராததால் அவர்கள் மற்றவர்களிடம் கேட்டு நிலை.

ஆங்கில எழுத்துக்களில் b - d , n - h , f - t போன்ற எழுத்துக்களை மாணவர்கள் புரிந்துகொள்வதில் சிரமம்.

மூன்றாம் வகுப்புவரை உள்ள சில மெல்ல கற்கும் மாணவர்களால் ஆங்கில எழுத்துக்கள் சிலவற்றை புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளதால் அவர்களால் ஆங்கில வார்த்தைகளை சரியாக படிக்க முடிவதில்லை.

Step 2 கற்பனை செய்

1. b - d , n - h , f - t போன்ற எழுத்துக்களை கரும்பலகையில் எழுதி அதன் மேல் மாணவர்களை எழுதச் சொல்லுதல். 2. குறிப்பிட்ட அந்த எழுத்து அட்டைகளை தனியே எடுத்து வேறுபாடுகளைச் சொல்லிக்கொடுத்தல். 3. முப்பரிமாண எழுத்துக்களை ( Three dimension letters ) பயன்படுத்தி சொல்லித் தருதல். 4. முப்பரிமாண எழுத்துக்களில் வரிவொற்றி எழுதச் சொல்லுதல். 5. குறிப்பிட்ட அந்த எழுத்து அட்டைகளை தனியே எடுத்து அவற்றை இரண்டிரண்டு துண்டுகளாக வெட்டி அவற்றை சேர்த்து சேர்த்து வைத்து சொல்லித் தருதல். மாணவர்களையும் அதை சொல்லிக்கொண்டே செய்யச் சொல்லுதல்.

b - d , n - h , f - t போன்ற எழுத்து அட்டைகளை தனியே எடுத்து அவற்றை இரண்டிரண்டு துண்டுகளாக வெட்டி அவற்றை சேர்த்து சேர்த்து வைத்து சொல்லித் தருதல். மாணவர்களையும் அதை சொல்லிக்கொண்டே செய்யச் சொல்லுதல். பலமுறை இப்பயிற்சியை அளித்தல்.

Step 3செய்

b - d , n - h , f - t போன்ற ஆங்கில எழுத்துக்களை அடையாளம் காண்பதில் முதல் வகுப்பு மாணவர்களுக்கும் சில மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் அவர்களால் ஆங்கில வார்த்தைகளை சரியாக படிக்க முடிவதில்லை. எங்கள் பள்ளியில் 57 தமிழ் எழுத்துத் துண்டுகளில் ஒவ்வொன்றையும் இணைத்து இணைத்து 247 எழுத்துக்களையும் உருவாக்கும்படி ஆசிரியர் உருவாக்கியுள்ளார். அவ்வெழுத்துக்களை சேர்த்து சேர்த்து வைத்துப் படிக்கும்போது மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். அதுபோல் ஆங்கில எழுத்துகள் உள்ள அட்டைகளையும் இரண்டிரண்டு துண்டுகளாக நறுக்கி அவற்றை மாணவர்கள் சேர்த்து சேர்த்து வைத்துப் படிக்கும்போது அதையும் அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்வார்கள். எனவே எங்கள் பள்ளியில் இருந்த பழைய ABCD உள்ள அட்டைகளில் மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் b - d , n - h , f - t எழுத்து அட்டைகளை தனியே எடுத்து அவற்றை இரண்டிரண்டாக நறுக்கி இரண்டு துண்டுகளையும் சேர்த்து சேர்த்து வைத்து சொல்லித் தந்தோம். அவ்வாறே மாணவர்களையும் செய்யச் சொன்னோம். பலமுறை இவ்வாறு மாணவர்கள் செய்து பார்த்தபோது அவர்களுக்கு எளிதாகப் புரிந்தது. இப்போது மாணவர்கள் குழப்பம் இல்லாமல் படிக்கின்றனர்.

மாணவர்களுக்கு என்றும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த b - d , n - h , f - t போன்ற எழுத்துக்கள் எங்கள் செயல்திட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. குழப்பத்தை ஏற்படுத்திய எழுத்துக்கள் எங்களுடைய தீர்வின் மூலம் மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதுடன் வார்த்தைகளையும் பிழையில்லாமல் படிக்கின்றனர்.

b - d , n - h , f - t போன்ற எழுத்து அட்டைகளை தனியே எடுத்து அவற்றை இரண்டிரண்டு துண்டுகளாக வெட்டி அவற்றை சேர்த்து சேர்த்து வைத்து சொல்லித் தருதல். மாணவர்களையும் அதை சொல்லிக்கொண்டே செய்யச் சொல்லுதல். பலமுறை இப்பயிற்சியை அளித்தல்.

எங்களுடைய செயல்திட்டத்தில் தாக்கம் ஏற்பட்ட மக்கள் , இது புதுமையான யோசனை என்றும் , தங்கள் பள்ளிகளில் இதைப் பயன்படுத்தப்போவதாகவும் கூறினர். மேலும் சில ஆசிரியர்கள் அவர்களுடைய பள்ளிகளில் இம்முறையைக் கையாண்டு அவர்களுடைய மாணவர்களுக்கும் தெளிவாக விளக்கி புரிய வைத்துள்ளனர்.

எழுத்துக்களை இரண்டு துண்டுகளாக நறுக்கி அவற்றில் b - d , n - h , f - t போன்ற எழுத்துக்களை விளக்கும்போது அதில் f எழுத்தின் மூலம் t எழுத்தை உருவாக்க முடியவில்லை. பின் f எழுத்தின் பின்புறம் blue sketch மூலம் வண்ணமிட்டு அதில் t எழுத்தை அமைக்க முயற்சித்தோம். அதன் பின் சரியாக வைக்க வைக்க முடிந்தது.

7-15 நாட்கள்

தரம் கல்வி

எழுத்துக்களை முதலில் புரிந்துகொண்டால்தான் மாணவர்கள் வார்த்தைகளை சரளமாக படிக்க முடியும். சில எழுத்துக்கள் மாணவர்களுக்குத் தெரியாவிட்டாலும் அல்லது தவறாக உச்சரித்தாலும் வார்த்தைகளையும் பிழைகளுடனே படிப்பார்கள். அதனால் அவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய எழுத்துக்களை கண்டறிந்து அவற்றை தீர்க்கும் முறையை கண்டறிந்து செயல்படுத்தினால் மாணவர்களின் படித்தல் திறன் மேம்படும்.

Step 4 பகிர்

எங்களுடைய செயல்திட்டதை அருகாமையில் உள்ள பள்ளிகளிலும், முகநூலிலும் , வாட்சப்பிலும் பகிர்ந்தோம். இதைப் பார்த்த அனைத்து ஆசிரியர்களும் இது புதுமையான யோசனை என்றும் , தங்கள் பள்ளி மாணவர்களிடத்திலும் இது போன்ற பிரச்சனை உள்ளதால் இம்முறையைக் கையாண்டு அப்பிரச்னைக்கு தீர்வு காணப் போவதாகக் கூறினார். சிலர் அடுத்த சில நாட்களிலேயே இம்முறையை செயல்படுத்தி அதில் வெற்றியும் பெற்றனர்.

100 க்கும் மேற்பட்ட

எழுத்துக்களைப் புரிந்துகொள்வதில் தொடக்கநிலை மாணவர்களுக்கு, அதிலும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு கடினம் என்றாலும் அவற்றை புரியவைக்கும் முறையில் புரிய வைத்தால் எளிதாக விளங்கிக்கொண்டு படிப்பார்கள். அந்த வகையில் இனிவரும் காலங்களிலும் மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் b - d , n - h , f - t போன்ற எழுத்துக்களை இம்முறையைக் கொண்டு கையாண்டு சொல்லிக்கொடுத்து அவர்கள் எளிதாக விளங்கிக்கொள்ளும்படி செய்யத் திட்டமிட்டுள்ளோம். மேலும் அனைத்து ஆசிரியர்களிடமும் பயிற்சி நடைபெறும் இடத்திலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இம்முறையை எடுத்துக் கூறி அவர்களின் பள்ளியிலும் இச்செயல்பாட்டை செய்து மாணவர்களின் சிறப்பான, தரமான கற்றலுக்கு வழிவகுக்கத் திட்டமிட்டுள்ளோம்.