கதை முன்னோட்டம்

2018

100% பிளாஸ்டிக் இல்லா பள்ளி

Pums avanathankottai west

Tamil Nadu

வழிகாட்டி

Baskaran S

மாணவர்கள்

மதன்பாபு,

காளிதாஸ் ,

தெய்வலெட்சுமி,

ஸ்ரீ மதி ,

நர்மதா,

Step 1 உணரவும்

பிளாஸ்டிக் பொரு‌ட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை உணரும் போது கவலைகளை ஏற்படுத்தியது.

பள்ளி

சமூகம்

Step 2 கற்பனை செய்

பள்ளி அளவில் முற்றிலும் பிளாஸ்டிக் இல்லா பள்ளியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அனைத்தும்

Step 3செய்

முதலில் மாணவர்கள் பயன்படுத்தும் பேனா, பென்சில், ஸ்கேல், lunch box, geometry box, lunch bag மாற்ற முடிவு செய்யப்பட்டது அடுத்து பள்ளியில் உள்ள அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் இல்லா பொருட்களாக மாற்ற முடிவு செய்ய பட்டது.

தமிழகத்தின் முதல் 100%நெகிழி இல்லா பள்ளி: ஆகஸ்ட் 15 முதல் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பிளாஸ்டிக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பிளாஸ்டிக் இல்லா மெட்டல் பேனா, காகித பேனா, மெட்டல் மற்றும் மரத்தாலான ஸ்கேல் என அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களும் ஆசிரியர்களும் உணவு கொண்டு வர மஞ்சள் பை, தண்ணீர் கொண்டு வர சில்வர் வாட்டர் பாட்டில் மற்றும் தூக்கு வாளி மட்டுமே பயன்படுத்துகின்றனர். பள்ளியில் ஆசிரியர் அமரும் இருக்கை, குப்பைத்தொட்டி, குடிநீர் கேன் என எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்கல் பொருட்களை தவிர பள்ளியில் உள்ள மற்ற அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் இல்லா பொருட்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019 முதல் தமிழகம் நெகிழி இல்லா மாநிலமாக மாறுவதற்கு இப்பள்ளி ஓர் விதையாக அமைந்துள்ளது.

அனைத்தும் செயல்படுத்தப்பட்டது மாற்றப்பட்டது

பள்ளி அளவில் செய்தததால் மாணவர்களின் பெற்றோர்களும் தன் வீட்டில் plastic coverku பதிலாக துணிப்பை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்

பள்ளியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த கடினப்பட்டோம். பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சவாலாக இருந்தது. பிளாஸ்டிக் பேனாவிற்கு மாற்று கிடைப்பது கடினமாக இருந்தது.

அதிகமாக 30 நாட்கள்

நிலம் மீதான வாழ்க்கை

பிளாஸ்டிக் அணுகுண்டை விட மேசமானது. இது நிலத்தை மலடாக்கி விடுகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை பருவநிலை மாற்றம் கூட ஏற்படுகின்றது. ஆதலால் முதலில் இதை பள்ளி அளவில் ஒழிக்க முடிவு செய்யப்பட்டது.

Step 4 பகிர்

அனைத்து ஊடகங்களிலும் பகிர பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அனைவரும் அவரவர் பள்ளியில் பின்பற்ற தொடங்கினர்.

100 க்கும் மேற்பட்ட

நெகிழியின் பாதிப்பினை உணர்ந்து அதனை முற்றிலும் ஒழிக்க மாணவர்களை ஆயுதமாக கொண்டு பள்ளியிலேயே அதனை செயல்படுத்தினோம். இன்று நெகிழி ஒழிப்பில் ஆவணத்தாங்கோட்டை-மேற்கு பள்ளி முன்மாதிரி பள்ளியாக விளங்குகின்றது.