கதை முன்னோட்டம்

2018

தண்ணீர் தண்ணீர்!!

SSATN PANCHAYAT UNION MIDDLE SCHOOL ,NEW STREET

Tamil Nadu

வழிகாட்டி

SELVACHIDAMBARAM SELVACHIDAMBARAM

மாணவர்கள்

இரகுராமன்,கமலேஷ்,அம்ரு,முஹமது பாசில்,நவீன் ,

Step 1 உணரவும்

1.பள்ளியில் உள்ள ஆழ்துளை நீர் குழாயில் கிடைக்கும் நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் உப்புத்தன்மை நிறைந்ததாக காணப்படுதல் சுமார் 1600 TDS (TOTAL DESOLVE SOLID) (குடிநீர் TDS அளவு 400). நிலத்தடி நீர் மட்டம் மிக கீழே காணப்படுதல். 2.பள்ளிக்குத் தேவையான கலையரங்கம் அமைத்தல். 3.கழிவு நீர் அகற்றல் மேம்பாடு.

பள்ளியில் உள்ள ஆழ்துளை நீர் குழாயில் கிடைக்கும் நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் உப்புத்தன்மை நிறைந்ததாக காணப்படுதல் சுமார் 1600 TDS (TOTAL DESOLVE SOLID) (குடிநீர் TDS அளவு 400). நிலத்தடி நீர் மட்டம் மிக கீழே காணப்படுதல்.

பள்ளியில் சரியான அளவில் குடிநீர் கிடைக்கமையால் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுதல்..

Step 2 Imagine

# குடிநீர் வாங்குதல் #மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து நல்ல குடிநீருக்கு வழிவகை செய்தல் # மாணவர்கள் கண்டறிந்த தேங்காய் மட்டைகளை வைத்து புதிய முறையில் மழைநீர் சேகரிப்பு செய்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்..

# மாணவர்கள் கண்டறிந்த தேங்காய் மட்டைகளை வைத்து புதிய முறையில் மழைநீர் சேகரிப்பு செய்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்..

Step 3செய்

பள்ளியில் இரண்டு ஆழ்துளை குழாய்கள் உள்ளன.இதன் மூலம்தான் தண்ணீர் பள்ளிக்குப்பெறப்படுகிறது.ஆனால் அதில் உப்பின் அளவு சுமார் 1600 TDS (TOTAL DESOLVE SOLID) (குடிநீர் TDS அளவு 400). நிலத்தடி நீர் மட்டம் மிக கீழே காணப்படுதல்.பள்ளியில் மூன்று மாடிக்கட்டிடங்கள் உள்ளன.இதில் மழை நீர் சேகரிப்பு முறையானதாக இல்லை.இக்கட்டிடத்தில் பெய்யும் மழை நீர் ஓரிடத்திற்கு வருமாறு குழாய்கள் சரி செய்யப்பட்டன.அந்த குழாய்கள் இரண்டு ஆழ்துளை குழாய்கள் உள்ள இடத்திற்கு வருமாரு சரி செய்யப்பட்டது.ஆழ்துளை குழாய்களின் அருகாமையில் சுமார் 7 அடி ஆழத்தில் குழி வெட்டப்பட்டது.அதில் மாணவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த தேங்காய் மட்டைகள் வரிசையாக அடுக்கப்பட்டன.மேல்பகுதியில் சிமெண்டால் ஆன வளையம் போடப்பட்டது.கட்டிடங்களில் விழும் மழைநீர் ஒரு துளி கூட வீணாகாமல் அந்த தேங்காய் மட்டை குழிக்குள் விழுகிறது..இதனை மழைகாலமாகிய தற்சமயத்தில் இதனை செய்ததால் சுமார் 1600 TDS (TOTAL DESOLVE SOLID) அளவு இருந்த உப்புத்தன்மை ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 200 tds அளவு குறைந்து சுமார் 1400 TDS அளவு மட்டுமே காணப்படுகிறது.இதே அமைப்பு நீடித்தால் இரண்டே வருடங்களில் 400 TDS அளவு வந்து குடிக்க உகந்த நீராக மாறும்.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 200 tds அளவு குறைந்து சுமார் 1400 TDS அளவு மட்டுமே காணப்படுகிறது.இதே அமைப்பு நீடித்தால் இரண்டே வருடங்களில் 400 TDS அளவு வந்து குடிக்க உகந்த நீராக மாறும் என்பதே மாணவர்கள் கண்டுபிடித்த இந்த அமைப்பின் முடிவாகும்..

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 200 tds அளவு குறைந்து சுமார் 1400 TDS அளவு மட்டுமே காணப்படுகிறது.இதே அமைப்பு நீடித்தால் இரண்டே வருடங்களில் 400 TDS அளவு வந்து குடிக்க உகந்த நீராக மாறும் என்பதே மாணவர்கள் கண்டுபிடித்த இந்த அமைப்பின் முடிவாகும்..

பள்ளி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் இதனால் பயனடைந்தனர்.மேலும் 3000 மேற்பட்ட கிராம மக்கள் இதனப்பற்றி தெரிந்து கொண்டு பயனடைந்தனர்.

குழாய்களை சரி செய்ய தேவையான பணத்தை.மாணவர்கள் நன்கொடையாக பெறுவதில் சிக்கல் இருந்தது. இதனை சரிசெய்ய அதற்கான பணத்தை ஆசிரியர்களே தந்தனர்.

அதிகமாக 30 நாட்கள்

சுத்தமான நீர் மற்றும் சுத்திகரிப்பு

இதனைக்காணும் ஒவ்வொருவரும் இதனைச்செய்தால்.ஊர் முழுவதும் சுத்தமான மற்றும் நல்ல குடிநீர்.நிலத்தடி நீர் மட்ட மேம்பாடு ஏற்படும்.

Step 4 பகிர்

#தினசரி இதழ்கள் மூலமும் #சமூக வலைதளங்கள் மூலமும் #தொலக்காட்சி மூலமும்

100 க்கும் மேற்பட்ட

அனைத்து ஊர் பஞ்சயாத்து அமைப்புகள் மூலம் அனைத்து கிரமங்களிலும் இந்த அமைப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளல்.